Friday 25 December 2015

தந்தை பெரியாரின் 42ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி

கோவை வெங்கிட்டாபுரத்தில்

அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின்

42ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் தோழர்கள் சூளுரை..!










அறிவுலக ஆசான் தந்தை‍‍ பெரியாரின் 42ஆவது நினைவு நாளையொட்டி 24.12.2015 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டா புரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டார்கள்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முன்னாள் பகுத்தறிவாளர் கழக செயலாளர் தோழர் மே.அ.தனபாலன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அ.அசரப் அலி, குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் ஆகியோர் தந்தை பெரியாரின் பணிகளைப் பற்றியும், இன்றைய சூழலில் சாதி,மத வெறிகளுக்கெதிராக தோழர்களின் பங்களிப்பைப் பற்றியும் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு குததூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசன் தலைமை வகித்துப் பேசினார். தோழர் சி.வா.ஞானவேல் நன்றி கூறினார்.

பெரியார் பிஞ்சுகள் முகில், மகிழ்நிலா, நிழற்படப் போராளி ஜெயபால் ராமய்யா, ஓவியர் முரளி, தோழர்கள் அ.சம்பத், து.ஆறுமுகம், ப.பாலன், இரா.ஈசுவரன், மு.பெரியதம்பி, வால்பாறை சிவா, ப.ராஜ்குமார் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றார்கள்.

தோழர் ஆர்.சந்திரசேகரன் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவையொட்டி குருதிக்கொடை முகாம்.

தோழர் ஆர்.சந்திரசேகரன் அவர்களின் 25ஆம் ஆண்டு
நினைவையொட்டி குருதிக்கொடை முகாம்

**********************************************************

 




கோவை இரத்தினசபாபதிபுரத்திலுள்ள தந்தை பெரியார் படிப்பகத்தின்
தோழர் ஆர்.சந்திரசேகரன் அவர்களின் 25ஆம் ஆண்டு
நினைவையொட்டி குருதிக்கொடை முகாம் கடந்த ஞாயிறன்று நடந்தது..

நிகழ்ச்சியில் குததூசி குருசாமி படிப்பகத்தில் குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் வடிவமைத்து திலகா மறுதோன்றி அச்சகத்தில்
அச்சிட்ட ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.

விழாவிற்கு பெரியார் படிப்பகத்தின் செயலாளர் தோழர் க.தேவேந்திரன் தலைமை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், சுசி.கலையரசன், ஆர்.சந்திரசேகரன் அவர்களின் குடும்பத்தினர், குததூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசன் மற்றும் தோழர்கள் பங்கேற்றார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதியளித்தார்கள்.

Sunday 6 December 2015

விழிக்கொடை, உடற்கொடை

தோழர் கா.சு.நாகராசனின் தந்தையார்

நா.சுப்பிரமணியன் மறைவு.

விழிக்கொடை, உடற்கொடை செய்யப்பட்டது.

***************************************************



  பொள்ளாச்சியை அடுத்த காளியப்பகவுண்டபுதூரை சேர்ந்த தோழர்.காசு.நாகராசன் அவர்களின் தந்தை நா.சுப்பிரமணியன் (வயது 75) அவர்கள் கடந்த 04.12.2015 அன்று காலை முடிவெய்தினார். அவர் உடல் அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனையில் கண்தானம் செய்பட்டது. மதியம் 3 மணி அளவில் அவரது இல்லத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், சா.கதிரவன், இல.அங்ககுமார், மா.திருமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர்கள் நேருதாசு, நிர்மல், திமுக, விடுதலை சிறுத்தைகள், அம்பேத்கர் இயக்க பொறுப்பாளர்கள் இரங்கலுரையாற்றினார்கள்.


சீர், சடங்குகளும் இன்றி விழிக்கொடை, உடற்கொடைக்கு ஒத்துழைத்த உறவினர்களுக்கு தோழர்.காசு.நாகராசன் கண்ணீருக்கிடையிலும் நன்றி கூறி பேசினார்.

உறவினர்கள், ஊர் பொது மக்கள் முன்னிலையில் வழக்கமாக நடைபெறும் எந்தவித சீர், சடங்குகளும் இன்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் மாலை 6 மணிக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காக உடல் ஒப்படைக்கப்பட்டது.
.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றார்கள்.



சிறுபாண்மை மக்களின் வளர்ச்சி

கோவை வானொலியில் குத்தூசி குருசாமி படிப்பக
பொறுப்பாளர் சா.கதிரவன் கருத்துரையாற்றினார்.
*********************************************************

 


   கோவை வானொலியில்... '' சிறுபாண்மை மக்களின் வளர்ச்சி '' என்ற தலைப்பில் குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் கருத்துரையாற்றினார்.

கோவை வானொலி மற்றும் வானவில் பண்பலை தலைமை நிகழ்ச்சி நிர்வாகி
திரு.தாமரைச்சந்திரன் உடன் உரையாற்றினார்.

கடந்த 23.11.2015 அன்று மாலை 5 மணியளவில் திருச்சி சாலை, இராமநாதபுரத்திலுள்ள கோவை வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் Mw999 அலைவரிசையில் 13 நிமிடம் ஒலிபரப்பானது.

தகவல் பலகையில் இன்று ..!

குத்தூசி குருசாமி படிப்பக தகவல் பலகையில்
இன்று ..!

 

 


'' சாதி என்பது
ஒருவித மன நோய்.
இந்த நோய்க்கான ஆணிவேர்
இந்துமத போதனைகளே ஆகும். ''


- புரட்சியாளர் அம்பேத்கர்
   06.12.2015

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் - 06.12.2015

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி..!

குத்தூசி குருசாமி படிப்பகத்தில் ..!!








புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 06.12.2015 ஞாயிறன்று காலை 9 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள் தோழர்கள்

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் முன்னிலை வகித்தாகள்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அ.அசரப் அலி, பெரியார் பிஞ்சுகள் மகில்நிலா, முகில், தோழர்கள் இரா.ஈசுவரன், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, சி.வா.ஞானவேல், ஞானக்குமார், புருசோத்தமன் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றார்கள்.

அதன் பின்னர் வட கோவை, இந்திய உணவுக் கழக வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காலை 10.30 மணியளவில் தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள் தோழர்கள்..!

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...