கோவை வெங்கிட்டாபுரத்தில்
அறிவுலக ஆசான்தந்தை பெரியாரின்
140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளையொட்டி 17.09.2018 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் மாணவர், மாணவியர்களுக்கு, பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அசரப் அலி, சங்கமம் அமைப்பின் செயற்பாட்டாளர் எஸ்.அன்பரசு ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
முன்னதாக விழாவிற்கு குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் சா.கதிரவன் தலைமை வகித்தார். தோழர்கள் இரா.ஈசுவரன், அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்தாகள்.
தோழர்கள் ச.மாதவன், து.ஆறுமுகம், ப.பாலன், வே.சக்தி மற்றும் பலர் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment