Wednesday 6 June 2018

பிராமணாள் கபே பெயர் அழிப்பு போராட்டம்.

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் தோழர் சா.கதிரவன், தோழர் அர.இராசன் விடுதலை!




திருச்சி திருவரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் தலைமையில் கடந்த  20.10.2012 அன்று 'பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டம் நடை பெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட கழகத்தின் பொதுச் செயலாளர்  கு.இராம கிருட்டிணன் உட்பட 112 தோழர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  நீதிமன்றக் காவலில் அனைவ ரையும் திருச்சி சிறையில் 15 நாட்கள்  அடைக்கப் பட்டிருந்தனர்.

இருந்த போதும் பல்வேறு வழக்குகள், கோரிக்கை களுக்கு செவி சாய்க்காத அரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முற்றுகை போராட்டத்திற்கு அடுத்த நாளே 'பிராமணாள் கபே' பெயர் பலகையை நீக்கியது
இந்த போராட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.



கடந்த 6 வருடங்களாக நடை பெற்ற இந்த வழக்கு, 05.06.2018 அன்று நீதிமன்ற விசார ணைக்கு வந்தது.

 இந்த வழக்கை, கழகத்தின் துணைத் தலைவரும், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறி ஞருமான செ.துரைசாமி அவர்கள் ஆஜராகி வாதிட்டார்.

துணைத் தலைவரின் வாதத்தை ஏற்று, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 112 தோழர் களையும் இந்த வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்தார்.

வேலாண்டிபாளையம் பகுதியிலிருந்து குத்தூசி குருசாமி படிப்பக பொறு ப்பாளர்கள் தோழர் சா.கதிரவன், தோழர் அர.இராசன் ஆகியோர்  அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் 15 நாள் திருச்சி சிறையில் இருந்தனர்.

விடுதலையான தோழர்களி்ன் பிரிவு, வாழ்நாளில் மறக்க இயலாத சோகமான நாளாக இருந்தது என்பது குறிப்பிட த்தக்கது.

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...