Wednesday 6 May 2015

நூல்களை கொடையளித்த தோழர் சாமிப்பிள்ளை..!

'' பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் ''

நூல்களை கொடையளித்த தோழர் சாமிப்பிள்ளை..!

********************************************************

கோவையில் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழர் சாமிப்பிள்ளை தமிழீழ ஆதரவாளர், பெரியாரின் தொண்டர்..

கடந்த 02.05.2015 அன்று குத்தூசி குருசாமி படிப்பகத்திற்கு நேரில் வந்து
அறிஞர் வே.ஆனைமுத்து அய்யா தொகுத்தளித்த
'' ரூ.5,800 விலையுள்ள மதிப்புமிக்க
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் '' நூல்களை
கொடுத்து மகிழ்வை ஏற்படுத்தினார் தோழர் சாமிப்பிள்ளை அவர்கள்.

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன்,
தோழர் அ.சம்பத் நூல்களை நன்றியுடன் பெற்றுக்கொண்டார்கள்.

தோழர் சாமிப்பிள்ளை..!

'' பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் ''

நூல்களை கொடையளித்த தோழர் சாமிப்பிள்ளை..!

கோவையில் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழர் சாமிப்பிள்ளை தமிழீழ ஆதரவாளர், பெரியாரின் தொண்டர்..
பணியாற்றிய மின் வாரிய அலுவலகத்தில்
தனது இருக்கைக்கு பின்புல சுவற்றில்
தாமஸ் ஆல்வா எடிசன் படத்தை
மாட்டி வருகிற வாடிக்கையாளர்களிடமும்
பகுத்தறிவு, இனஉணர்வு பற்றி கருத்துரையாற்றுவார்.

கடந்த 02.05.2015 அன்று குத்தூசி குருசாமி படிப்பகத்திற்கு நேரில் வந்து
அறிஞர் வே.ஆனைமுத்து அய்யா தொகுத்தளித்த
'' ரூ.5,800 விலையுள்ள மதிப்புமிக்க
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் '' நூல்களை
கொடுத்து மகிழ்வை ஏற்படுத்தினார் தோழர் சாமிப்பிள்ளை அவர்கள்...

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன், 
தோழர் அ.சம்பத் நூல்களை நன்றியுடன் பெற்றுக்கொண்டார்கள்.

மே முதல் நாள்

'' தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மே முதல் நாள் ஒன்றே உகந்த தினமாகும்.! '' 

உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்த அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் ஹேமார்க்கெட் பகுதி தியாகிகளின் உதிரத்தால் மலர்ந்த உரிமை நாளான 129-வது மே நாளை முன்னிட்டு கோவை வெங்கிட்டாபுரம்
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் எழுதப்பட்ட அய்யாவின் புரட்சி மொழி..!!

அறிஞர் பொள்ளாச்சி நசன்

    உலகெங்குமுள்ள தமிழர்களுக்காக இணையம் வழியாக தமிழக்கல்விப் பணியாற்றிவரும் அறிஞர் பொள்ளாச்சி நசன் அவர்களும், அவரின் உற்ற தோழரும் ஓய்வுபெற்ற ஆசிரியர், வானவியல் பரப்புரையாளர் வடவள்ளி ரமேசன் அவர்களும் நமது படிப்பகத்திற்கு வந்து நமது பணியைப் பாராட்டினார்கள்.

(30.04.2015)

பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள்..!
*****************************************************

பாவேந்தரின் வரிகள்..!!

படம் : 8

(வடிவமைப்பு : தோழர் சா.கதிரவன், அறிவுச்சோலை கலையகம்)

பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள்..!
*****************************************************

பாவேந்தரின் வரிகள்..!!
 படம் : 7

(வடிவமைப்பு : தோழர் சா.கதிரவன், அறிவுச்சோலை கலையகம்)

பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள்..!
*****************************************************

பாவேந்தரின் வரிகள்..!!

படம் : 5

(வடிவமைப்பு : தோழர் சா.கதிரவன், அறிவுச்சோலை கலையகம்)

பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள்..!
*****************************************************

பாவேந்தரின் வரிகள்..!!

படம் : 3

(வடிவமைப்பு : தோழர் சா.கதிரவன், அறிவுச்சோலை கலையகம்)

பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள்..!
*****************************************************

பாவேந்தரின் வரிகள்..!!

படம் : 2

(வடிவமைப்பு : தோழர் சா.கதிரவன், அறிவுச்சோலை கலையகம்)
பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள்..!
*****************************************************
பாவேந்தரின் வரிகள்..!!
படம் : 1

(வடிவமைப்பு : தோழர் சா.கதிரவன்,
அறிவுச்சோலை கலையகம்)

Monday 4 May 2015

எழுச்சியுடன் நடந்த
பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள் விழா..!
'***********************************************************'
கடந்த 19-4-2015  ஞாயிறு  மாலை கோவை வேலாண்டிபாளையம் தக்சின் உணவக வி.கே.ஆர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடந்தது.

விழாவை கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி
படிப்பகமும், வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கமும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன .

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் அர .இராசன் வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ப.பா.ரமணி தலைமையேற்றார்.
புலவர் செந்தலை  ந.கவுதமன் ஆற்றிய  'பெரியாருக்கு முன்னர் நாடும் நாமும்'  என்ற ஆய்வுரை ஒலிவட்டை குத்தூசி குருசாமி  படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் அறிமுகம் செய்து வைக்க,

தந்தை பெரியார் திராவிடர் கழகப்  பொதுச் செயலாளர்  கு.இராமகிருட்டிணன்
வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட துணை ஆட்சியர் வி.சுப்ரமணியன் மற்றும் குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் வழக்குரைஞர் சி.பி.சண்முகசுந்தரம்  ஆகியோர் ஒலிவட்டைப் பெற்றுக் கொண்டனர் .

சூலூர் பாவேந்தர் பேரவையின் தலைவர் புலவர் செந்தலை ந.கவுதமன் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சிறப்புரையாற்றினார்.

எல்.ஜான் விழாவை ஒருங்கிணைத்தத்தோடு நன்றியுரையும் ஆற்றினார்.

அறிஞர்களும், ஏராளமான தோழர்களும், பொதுமக்களும்
விழாவில் ஆர்வத்தோடு பங்கேற்றார்கள்.
மாட்டுக்கறி விருந்து...! குத்தூசி குருசாமி படிப்பகத்தில் !!
புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி !!
***************************************************************
கோவை வெங்கிட்டாபுரம், குத்தூசி குருசாமி படிப்பகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மாட்டுக்கறி விருந்து நடந்தது. உணவில் சாதி, மத வெறியை திணிக்கும் இந்துத்துவா சக்திகளின் ஆதிக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தோழர்கள் கூடி இந்த சிறிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

14.04.2015 - மாலை 6.30 மணி

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா !
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் !!
**********************************************************
14.04.2015
*******************
கோவை வெங்கிட்டாபுரம், குத்தூசி குருசாமி படிப்பகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் அண்ணலின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை முழக்கமிட்டனர்கள்.

நிகழ்வில் குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் அர.இராசன், சா.கதிரவன், தோழர்கள் அஷ்ரப் அலி, இரா.ஈசுவரன், பெரியதம்பி, வே.சக்தி, ஞானவேல், பெரியார் பிஞ்சுகள் மகிழ்நிலா, முகிலன், கவியரசன்
மற்றும் கட்டிட வல்லுனர் குப்புராசு ஆகி‍யோர் பங்கேற்றார்கள்.

பாவேந்தர் பாரதிதாசன் 125 வது பிறந்த நாள் விழா சுவரொட்டி.!
*****************************************************************

09.04.2015
கோவை வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கம்,
வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகம்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
இணைந்து நடத்தும்...

பாவேந்தர் பாரதிதாசன் 125 வது ஆண்டு விழா !
*****************************************************************
19.04.2015, ஞாயிறு மாலை 5.30 மணி,
கோவை வேலாண்டிபாளையம்,
தடாகம் சாலையிலுள்ள
வி.ஆர்.கே. வளாகம்,
தக்சின் உணவகம் மாடியில், கோவை-25

சிறப்புரை: புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள்.

விழாவில்..
கோவை பெரியார் படிப்பகத்தில்
நடந்த பெரியாரியல் பயிலரங்கில்
புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள்
ஆற்றிய ஆய்வுரை
' திராவிடர் இயக்க வரலாறு (பாகம் - 1) '
குறுந்தட்டு வெளியீடு !!

அனைவரும் வருக..!!

குத்தூசி குருசாமி படிப்பக
சிந்தனைப் பலகையில் இன்று...
(19.03.2015)

கல்வியில் மூடத்தனம்
'*********************************
பகுத்தறிவுக்கு மாறானதும், மூடநம்பிக்கையை வளர்ப்பதுமான எந்தச் செய்தியும் கல்வியில் பாடமாகக் கற்பிக்கக் கூடாது.

தந்தை பெரியார்

தாயார் மறைந்தார்.

தாயார் மறைந்தார்.

குத்தூசி குருசாமி படிப்பக  தோழர் கோவை ம.ரே.ராசக்குமாரின் தாயார் ரேணுகா (72) 21-2-2015 அன்று காலை கோவையில் இயற்கை எய்தினார்.

மறைந்த அம்மையார் ரேணுகா அவர்களின் விழிகள்
கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையளிக்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின்
41 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி..!
************************************************
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் ..!!
************************************************

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின்
நினைவு நாளையொட்டி இன்று (24.12.2014-புதன்கிழமை)
காலை 8 மணிளவில், கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள் தோழர்கள்

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் அ.சம்பத் முன்னிலை வகித்தாகள்.

பெரியார் பிஞ்சுகள் ப.மகிழ்நிலா, நிலா, அன்பு, கவிப்பிரியன் மற்றும் தோழர்கள் இரா.ஈசுவரன், வே.சக்தி, து.ஆறுமுகம், ராஜ்குமார், காலிபர் ராஜசேகர், சி.வா.ஞானவேல் ஆகியோர் பங்கேற்றார்கள்.

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...