Monday 30 April 2018

மே முதல் நாள்!

மே முதல் நாள்!




'' இந்தியாவில் தொழிலாளர்கள் 14மணி நேர உழைப்பை 8மணி நேரம் என்று  சட்டமாக்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.! ''

உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்த அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் ஹேமார்க்கெட் பகுதி தியாகிகளின் உதிரத்தால் மலர்ந்த உரிமை நாளான 132-ஆவது மே நாளை முன்னிட்டு கோவை வெங்கிட்டாபுரம்
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் அம்பேத்கரின் பெரும்பணியைப்பற்றி எழுதப்பட்ட வரிகள்..!!

மே முதல் நாளைக் குறித்து தந்தை பெரியார்!

'' தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மே முதல் நாள் ஒன்றே உகந்த தினமாகும்.! ''


Friday 27 April 2018

உலக புத்தக நாள் விழா வேலாண்டிபாளையம் கிளை நூலகத்தில் நடந்தது.

உலக புத்தக நாள் விழா வேலாண்டிபாளையம் கிளை நூலகத்தில் நடந்தது.







நூலகம் வருவதற்கு காரணமானவர் குத்தூசி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசனுடைய சகோதரர் வரதராசன். அவர் தலைமையில் விழா நடந்தது.

பங்கேற்ற பிஞ்சுகள் பாடல், கதை, கவிதை சொல்லி அசத்தினார்கள்.

கதை, கவிதை, ஓவியப் போட்டிகளில்    வெற்றி பெற்ற பிஞ்சுகளுக்கு குத்தூசி படிப்பக பொறுப்பாளர் தோழர் சா.கதிரவன் பரிசளித்து சிறப்பித்தார்.

பங்கேற்ற அனைவருக்கும் கொள்ளு வடையும், சிறு தாணிய பாயாசமும் கொடுத்து மகிழ வைத்தார் ஆசிரியை மல்லிகா.

முடிவில் நூலக பொறுப்பாளர் பிரபு நன்றி கூறினார்.

#வாசிப்போம்_நேசிப்போம்_சுவாசிப்போம்_நூல்களை!

Sunday 22 April 2018

அறிவியல் மாமேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் பிறந்தநாள் கருத்தரங்கம்

அறிவியல் மாமேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் பிறந்தநாள்  கருத்தரங்கம்.







சமூக விஞ்ஞானப் பயிலரங்கம், குத்தூசி குருசாமி படிப்பகம் இணைந்து அறிவியல் மாமேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் பிறந்தநாள்  கருத்தரங்கம், பிரபஞ்சவியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் நினைவஞ்சலி, பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் குறுந்தகடு வெளியீடு, நேரிசையில் ஊரிசை வெண்பாவில் ஒரு கொங்கு வரலாறு நூல் மதிப்புரை குறுந்தகடு வெளியீடு நிகழ்ச்சி 24-3-2018  சனிக்கிழமை  மாலை  5-30 மணியளவில் கோவை வேலாண்டிபாளையம் ஜவகர்புரம் கலாமன்றத்தில் நடந்தது.

குத்தூசி குருசாமி படிப்பக தோழர் அர.இராசன் வரவேற்புரையாற்றினார். சமூக விஞ்ஞானப் பயிலரங்க தோழர் இரா.ஜீவபாரதி தலைமையேற்றார். பரிணாமவியலின் தந்தை "சார்லஸ் டார்வின்' மற்றும் "நேரிசையில் ஊரிசை வெண்பாவில் ஒரு கொங்கு வரலாறு நூல் மதிப்புரை" ஆகிய இரண்டு குறுந்தகடுகளை தயாரித்தளித்த அறிவுச்சோலை பதிப்பாளரும், குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளருமாகிய தோழர் சா.கதிரவன் உரையாற்றினார். இறுதியாக மார்க்சிய கல்வியாளர் தோழர் எஸ். பாலச்சந்திரன் சிறப்புரையாற்றினார். முடிவில் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்ட தோழர் இரா.பிரபு  நன்றியுரையாற்றினார்.

சிறப்பவாய்ந்த இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் 127-வது பிறந்தநாள் விழா.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்

127-வது பிறந்தநாள் விழா.






கோவை வெங்கிட்டாபுரம்,  குத்தூசி குருசாமி படிப்பகத்தில் 14.04.2018 காலை அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர்.

அதைத் தொடர்ந்து வடகோவை FCI அருகிலுள்ள மின் தொழிலாளர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் மார்க்சிய கல்வியாளர் தோழர் ச.பாலச்சந்திரன் அவர்கள் "அம்பேத்கரின் சமூகநீதி"என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

நிகழ்வுகளில் குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன், அ.சம்பத், இரா.ஈசுவரன், ப.ராஜ்குமார், மாதவன் மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

Saturday 21 April 2018

இனமீட்புப் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள்..!

இனமீட்புப் புரட்சிப் பாவலர்

பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள் இன்று..!




தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்.

இனமீட்புப் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள்..!

இனமீட்புப் புரட்சிப் பாவலர்
பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள் இன்று..!



தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்.

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...