Sunday, 22 April 2018

அறிவியல் மாமேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் பிறந்தநாள் கருத்தரங்கம்

அறிவியல் மாமேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் பிறந்தநாள்  கருத்தரங்கம்.







சமூக விஞ்ஞானப் பயிலரங்கம், குத்தூசி குருசாமி படிப்பகம் இணைந்து அறிவியல் மாமேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் பிறந்தநாள்  கருத்தரங்கம், பிரபஞ்சவியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் நினைவஞ்சலி, பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் குறுந்தகடு வெளியீடு, நேரிசையில் ஊரிசை வெண்பாவில் ஒரு கொங்கு வரலாறு நூல் மதிப்புரை குறுந்தகடு வெளியீடு நிகழ்ச்சி 24-3-2018  சனிக்கிழமை  மாலை  5-30 மணியளவில் கோவை வேலாண்டிபாளையம் ஜவகர்புரம் கலாமன்றத்தில் நடந்தது.

குத்தூசி குருசாமி படிப்பக தோழர் அர.இராசன் வரவேற்புரையாற்றினார். சமூக விஞ்ஞானப் பயிலரங்க தோழர் இரா.ஜீவபாரதி தலைமையேற்றார். பரிணாமவியலின் தந்தை "சார்லஸ் டார்வின்' மற்றும் "நேரிசையில் ஊரிசை வெண்பாவில் ஒரு கொங்கு வரலாறு நூல் மதிப்புரை" ஆகிய இரண்டு குறுந்தகடுகளை தயாரித்தளித்த அறிவுச்சோலை பதிப்பாளரும், குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளருமாகிய தோழர் சா.கதிரவன் உரையாற்றினார். இறுதியாக மார்க்சிய கல்வியாளர் தோழர் எஸ். பாலச்சந்திரன் சிறப்புரையாற்றினார். முடிவில் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்ட தோழர் இரா.பிரபு  நன்றியுரையாற்றினார்.

சிறப்பவாய்ந்த இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...