உலக புத்தக நாள் விழா வேலாண்டிபாளையம் கிளை நூலகத்தில் நடந்தது.
நூலகம் வருவதற்கு காரணமானவர் குத்தூசி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசனுடைய சகோதரர் வரதராசன். அவர் தலைமையில் விழா நடந்தது.
பங்கேற்ற பிஞ்சுகள் பாடல், கதை, கவிதை சொல்லி அசத்தினார்கள்.
கதை, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பிஞ்சுகளுக்கு குத்தூசி படிப்பக பொறுப்பாளர் தோழர் சா.கதிரவன் பரிசளித்து சிறப்பித்தார்.
பங்கேற்ற அனைவருக்கும் கொள்ளு வடையும், சிறு தாணிய பாயாசமும் கொடுத்து மகிழ வைத்தார் ஆசிரியை மல்லிகா.
முடிவில் நூலக பொறுப்பாளர் பிரபு நன்றி கூறினார்.
#வாசிப்போம்_நேசிப்போம்_சுவாசிப்போம்_நூல்களை!
No comments:
Post a Comment