Friday, 10 August 2018

கலைஞர் நினைவேந்தல் பேரணி - கூட்டம்

கலைஞர் நினைவேந்தல் பேரணி-கூட்டம்!
கோவை வேலாண்டிபாளையத்தில் நடைபெற்றது!









கோவை வேலாண்டிபாளையத்தில் 8-8-2018 வியாழக்கிழமை மாலை அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற கலைஞர் நினைவேந்தல் பேரணியும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞரின் மறைவிற்கு அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும் இரங்கலுரையாற்றினார்கள்.

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசன் வீரவணக்க உரையாற்றினார். நிகழ்வில் குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் சா.கதிரவன், திராவிடர் கழக தோழர்கள் செம்மொழி சுரேசு, பிரதீப் திராவிடன், விவேக், த.பெ.தி.க. தோழர்கள் அ,சம்பத், து.ஆறுமுகம், இரா.ஈசுவரன், ரமேசு, ம,கூத்தபிரான் மற்றும் பலர் பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சியை சங்கமம் செயற்பாட்டாளர் தோழர் வில்வம் ஒருங்கிணைத்தார்.


நிழற்படங்கள் உதவி : தோழர் வில்வம்

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...