கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தின்
கலந்துரையாடல் கூட்டம் நேற்று (13.04.2016-புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில்
படிப்பகத்தின் பொறுப்பாளர் வழக்குறைஞர் சி.பி.சண்முக சுந்தரம் அவர்கள்
தலைமையிலும், படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன், ந.இளவழுதி ஆகியோர் முன்னிலையிலும் தொடங்கியது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் குத்தூசி குருசாமி படிப்பகத்தின் பணிகள் பற்றியும், கழகப் பணிகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மே.அ.தனபாலன் அவர்கள் கழகத்திற்கு அய்ந்தாயிரம் ரூபாயும், குத்தூசி குருசாமி படிப்பகத்திற்கு இரண்டாயிரம் ரூபாயும் நன்கொடை வழங்கி சிறப்பித்தார்.
தோழர்கள் சா.கதிரவன், அர.இராசன், அ.சம்பத், வால்பாறை சிவா ஆகியோர் ஆண்டு நிதியளித்தார்கள். கூட்டத்தில் தோழர்கள் ப.பாலன், அ.சம்பத், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, இரா.ஈசுவரன், பெரியதம்பி, ப.ராஜ்குமார், வேல்முருகன், வே.சக்தி, ஆ.ரவி, பாபு, .ஈ.கவியரசன் மற்றும் தோழர்கள் பங்கேற்றார்கள்.
No comments:
Post a Comment