புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி !
புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி 14.04.2016 வியாழக் கிழமை காலை 8.00 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள் தோழர்கள். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் முன்னிலை வகித்தாகள்.
கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மே.அ.தனபாலன், படிப்பகத்தின் பொறுப்பாளர் வழக்குறைஞர் சி.பி.சண்முகசுந்தரம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அ.அசரப் அலி உரை நிகழ்த்தினார்கள்.
தோழர்கள் இரா.ஜெயபால், இரா.ஈசுவரன், அ.சம்பத், ப.ராஜ்குமார், ஈ.கவியரசன் மற்றும் பொது மக்களும் பங்கேற்றார்கள்.
அதன் பின்னர் வடகோவை இந்திய உணவுக் கழக வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள். கழகத் தோழர்களுடன் அர.இராசன், இரா.ஈசுவரன், அ.சம்பத், ப.ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.!
No comments:
Post a Comment