Thursday, 3 September 2015

குத்தூசி குருசாமி படிப்பக ஆலோசனைக் கூட்டத்தில் ..

குத்தூசி குருசாமி படிப்பக 

ஆலோசனைக் கூட்டத்தில்

கர்நாடக எழுத்தாளர் கல்புர்கிக்கு இரங்கல்.

கடந்த 02.09.2015, புதன்கிழமையன்று
மாலை 7மணியளவில்
கோவை, வெங்கிட்டாபுரத்திலுள்ள
குத்தூசி குருசாமி படிப்பகத்தில்
தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம்
படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் தலைமையில்
நடைபெற்றது. படிப்பக பொறுப்பாளர்
அர.இராசன் முன்னிலை வகித்தார்.

 கூட்டத்தில் தோழர்கள் அ.சம்பத், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, இரா.ஈசுவரன், பெரியதம்பி, இரா.கார்த்தி, கே.சுப்பிரமணி, பா.ஞானக்குமார், அர.ராஜ்குமார், சு.மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

இரங்கல்
மூட நம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும் போராடிய இந்துத்துவ வெறியனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எழுத்தாளர் கல்புர்கிக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்..

1, கோவிந்த் பன்சாரே மராத்தியில் எழுதிய "சிவாஜி கோன் ஹோட்டா?"-வை தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த "மாவீரன் சிவாஜி -
காவித் தலைவனல்ல காவியத் தலைவன்"
தோழர் சம்சுதீன் ஹீரா எழுதிய
கோவையில் நடந்த குண்டு வெடிப்பின்
பின்புலத்தை கொண்டு எழுதப்பட்ட கதை
"மௌனத்தின் சாட்சியங்கள்"
நூல்களின் அறிமுக விழாவை
வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கம்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன்
இணைந்து சிறப்பாக நடத்துவதென கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டது.


2, அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 137ஆவது
பிறந்த நாளான 17.9.2015 அன்று எழுச்சியான விழாவை
நடத்துவதெனவும், அய்யாவின் கருத்துகளை வெளியீடுகளின் வாயிலாக மக்களிடம் பரப்புவதெனவும்
முடிவெடுக்கப்பட்டது.

3, கோவையில் வருகிற டிசம்பர் மாதம்
கழகம் நடத்துகிற பார்ப்பனரல்லாதோர் பிரகடன்ம நூற்றாண்டு விழா மாநாட்டிற்கான பணிகளில் பங்கேற்று
அம்மாநாட்டை வெற்றி பெறச் செயவதென முடிவெடுக்கப்பட்டது.


மரண சாசனம்
தோழர் பெரியதம்பி என்கிற சிவசுப்பிரமணியின்
விருப்பத்தின்படி குத்தூசி குருசாமி படிப்பகத்தின் சார்பில்
அவருக்கு மரண சாசனம் வழங்கப்பட்டது.




மேலும் பகுதியில் பரப்புரைக்கூட்டங்கள் நடத்துவது,
படிப்பக பணிகள் குறித்தும் தோழர்கள் கலந்துரையாடினார்கள்.


No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...