கோவை வெங்கிட்டாபுரத்தில்
தந்தை பெரியாரின் 137ஆவது
பிறந்தநாள் விழா நடந்தது !
**********************************************************************
அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாளையொட்டி 17.09.2015
வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி
குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து
தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.
பின்னர் பொதுமக்களுக்கு பெரியாரின் கொள்கைகைளை துண்டறிக்கையாக கொடுக்கப்பட்டது. தோழர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
விழாவில் சேலம் மாவட்ட முன்னாள் பகுத்தறிவாளர் கழக செயலாளர் தனபாலன் அவர்கள் கருத்துரையாற்றினார்.
பெரியார் பிஞ்சுகள் ஓவியா, நிலா, அன்பு, முகிலன், மகிழ்நிலா,
கவிப்பிரியன், கவியரசன், கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின்
பொறுப்பாளர் சூரிய.நாகப்பன், அய்யா ஜெயபால் ராமய்யா, வர்மக்கலை ஆசான்
இராஜேந்திர கிருஷணராஜ், தோழர்கள் அ.சம்பத், து.ஆறுமுகம், ப.பாலன்,
இரா.ஈசுவரன், மு.பெரியதம்பி, வே.சக்திவேல் மற்றும் பொதுமக்களும் பங்கேற்று
சிறப்பித்தார்கள். இறுதியாக கோவை காந்திபுரத்திலுள்ள அய்யா சிலை முன்
தோழர்கள் கொள்கை முழக்கமிட்டார்கள்.
No comments:
Post a Comment