மே முதல் நாள்!
'' இந்தியாவில் தொழிலாளர்கள் 14மணி நேர உழைப்பை 8மணி நேரம் என்று சட்டமாக்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.! ''
உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்த அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் ஹேமார்க்கெட் பகுதி தியாகிகளின் உதிரத்தால் மலர்ந்த உரிமை நாளான 132-ஆவது மே நாளை முன்னிட்டு கோவை வெங்கிட்டாபுரம்
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் அம்பேத்கரின் பெரும்பணியைப்பற்றி எழுதப்பட்ட வரிகள்..!!
மே முதல் நாளைக் குறித்து தந்தை பெரியார்!
'' தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மே முதல் நாள் ஒன்றே உகந்த தினமாகும்.! ''