Friday, 18 May 2018

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பற்றி !        

   

(பகுதி -1)

ஜெகதீஸ் சொந்த  ஊர் மைசூர், 
அங்கு தான்  பிறந்து, வளர்ந்தது.
ஆனால் இவர் தாய் மொழி தெலுங்கு, தந்தை  இந்திய ரயில்வேயில் கண் மருத்துவர் பணி, நடுத்தர குடும்பம்,கல்லூரி படிப்பை முடித்த ஜகதீஸ் சுயதொழில் செய்து கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்ற கனவு,பணம் சம்பாதிக்கும் வெறி பற்றி கொண்டது.

கோழிப்பண்ணை, செங்கல்சூளை, கட்டிடத்தொழில், ஹோல்சேல் நெய், பலசரக்கு , இப்படி பல தொழில்கள்செய்தார் ஜகதீஸ, ஆனால் அவரின் கோடீஸ்வர கனவு ஈடேறுமா..

கேள்வி எழுந்துகொண்டே இருந்தது,மனைவி பெயர் விஜி, 
ஒரு பெண் குழந்தை, மனைவி விஜியை ஜகதீஸ் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டதாக சொல்கிறார்கள், 

திருமணம் ஆன  நாள்முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணம் ஜகதீஸ் வீட்டில் இருப்பது அரிது, இந்த நேரத்தில் தான் யோகா கற்று வந்தார் நண்பர்களுடன், மனைவி கொலை சர்ச்சை, எல்லாம்  சேர்ந்துகொள்ள  ஜகதீஸ்  முன்பு  செய்த  தேங்காய்  வியாபாரம்  சம்பந்தமாக  கோவை  பொள்ளாச்சி பகுதிகளுக்கு  வந்து  போனதால்  அந்த  இடம்  தனக்கு  சாதகம்  என்று  எண்ணி  அங்கு  கடைபரப்ப ஏதுவான  இடம் என்று  கண்டுகொண்டார், மேலும் சொந்த ஊரில் பலருக்கு ஜகதீசை தெரியும் என்பதால் அருகில் உள்ள  கோவைக்கு   1989-ம் ஆண்டு ஓடிவந்தார், சும்மா இல்லை  பெரும் ஜகஜால திட்டத்துடன்,


விகடனை பயன்படுத்தி ஜகதீஸ் ஜக்கி ஆன கதை !
======================
குமுதம் நித்யானந்தாவை வைத்து, “கதவைத் திற காற்று வரட்டும்” என்ற தொடரைத் தொடங்கினார்கள்.  நித்யானந்தாவின் சுவையான மொழி நடை காரணமாக இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.  

குமுதம் அதிபர் ஜவஹர்  பழனியப்பனோடு நெருக்கமான நித்யானந்தாவுக்காக குமுதம் தன் கதவுகளைத் திறந்தது.  இந்தத் தொடர் நித்யானந்தாவை,  அண்ணாமலை ரஜினிகாந்த் போன்ற வளர்ச்சியடைய வைத்தது.

நித்யானந்தாவின் தொடர் அடைந்த வளர்ச்சியைக் கண்டதும் விகடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான்,இதே  நேரம்தான்  நம்ம  ஜகதீஸ் கோயம்பத்தூரில், லிங்கம் ஒன்றை நிறுவி வசூல் லோக்கல்  விளபரங்கள்  மூலம்  வசூல்  லோக்கல்  லெவலில் சூடு  பிடித்தது, லோக்களை  தாண்டி  தன் பிசினசை  அகில இந்திய  அளவில்  கடைபரப்ப ஜகதீஸ் தன் பிசினஸை விளம்பரபடுத்தும் நோக்கில் பத்திரிகை வாசல் படிகளில் ஏறி இறங்கிகொண்டிருந்தார், 

விகடன் வாய்ப்பு கொடுத்தது, அப்போதுதான் ஜெகதீஷாக இருந்து வித்தியாசமாக சத்குருவை போட்டு ஜக்கி வாசுதேவ்,வாசுதேவ் அப்பன் பெயர், 

ஆக ஒருவழியாக  சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று மருவி ...விகடன் ஜக்கியை வைத்து  அழகாக போட்டோ சூட் செய்து குமுதத்துக்கு போட்டியாக ஒரு ஆன்மீக தொடரை தொடங்குகிறது விகடன்.  

நித்யானந்தாவைப் போலவோ, ஓஷோ போலவோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவோ, விரிவான அறிவும், வாக்கு சாதுர்யமும், மொழி நடையும் இல்லாதவர் ஜக்கி.   இதனால் மற்றவர்களைப் போல, ஜக்கி இத்தொடரை எழுதாமல், ஜக்கியின் பொன்மொழிகளாக பட்டி டிங்கரிங் செய்து அதை தொகுத்து தொடராக வெளியிடப்பட்டது.  

இத்தொடரை தொகுத்தது, சுபா என்ற இரட்டை எழுத்தாளர்கள்.   இந்தத் தொடருக்காக, ஜக்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை, விகடன் நிறுவனத்தின் பல்வேறு பத்திரிக்கைகளுக்கு தந்ததாகத் தெரிகிறது.மற்ற ஆன்மீக வியாபாரிகளோடு ஒப்பிடுகையில் தன்னிடம் உள்ள குறையான வசீகரமான பேச்சு இல்லாதததை வேறு வகையில் சரி செய்தான் ஜக்கி. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன உலகின் மூத்த தத்துவ ஞானிக்கு நேர் முரணாக “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற வாதத்தை முன்வைத்தான்.   

வழக்கமான ஆன்மீக குருக்கள் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக் கொண்டு அருள் வாக்கு கொடுப்பதைப் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, ஜீன்ஸ் பேன்டும், கூலிங் கிளாஸும் அணிந்து ஹம்மர் காரிலும், ஹோண்டா பைக்கிலும் வலம் வந்து கொண்டு, தத்துவமும் அருள்வாக்கும் அளிக்கும் சாமியாரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. 

இந்தத் தொடர் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதவ் என்கிற நபரை சத்குருவாக மாற்றியது. 

ஆனந்த விகடன் தொடருக்குப் பிறகு, இவரின் மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு கூடுகிறது.  

ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும், ஜக்கிவாசுதேவின் ஆன்மிக வியாபாரத்தை, பல மடங்கு உயர்த்தின.   இவ்வாறு வளர்ந்த அந்த வியாபாரத்தின் ஒரு பகுதிதான் இந்தியா முழுக்க, குறிப்பாக தமிழகமெங்கும் நடத்தப்படும் ஈஷா யோகா தியான வகுப்புகள்.

===========================
ஈஷா யோகா என்ன நடக்கிறது..?==========================

8000 ரூபாய் பீஸ்  மூன்று நாள் என்றுதான் தொடங்குவார்கள்,முதல் இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்து விட்டு, மூன்றாம் நாள் முக்கிய யோகப்பயிற்சி செய்வதற்கான பூஜை என்று தொடங்குவார்கள்.   

அந்த பூஜையின் போது, ஜக்கி வாசுதேவின் பெரிய படத்தை வைத்து, அரை மணி நேரம் பூஜை செய்வார்கள்.  

இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது மூளைச்சலவை.  வெறும் யோகப்பயிற்சிகளை மட்டும் சொல்லித்தந்தால், ஜக்கியின் சாம்ராஜ்யம் இப்படி விரிவடைந்திருக்காது.

இதற்குப் பிறகு, உருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, 

இந்த உருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.  வகுப்பு முடிந்ததும் பார்த்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலையிருக்கும் உருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். 

அதற்கு அடுத்தபடியாக வகுப்பு முடிந்ததும் சத்துமாவுக் கஞ்சி தயாரித்து அருந்துவதற்கு தருவார்கள்.  தரும்போதே, இந்த சத்துமாவு ஈஷா மையத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்று கூறுவார்கள்.  

நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்கள் உங்களின் அனுபவங்களைக் கூறுங்கள் என்று பேசச் சொல்லுவார்கள். எல்லாம் பிசினஸ் ட்ரிக்தான் ..

வகுப்பில் வந்தவர்களும் பேசுவார்கள்.  மூன்று சில நேரம் நான்கு  நாட்கள் யோகா பயிற்சி செய்து முடித்ததும், எனக்கு உலகமே புதிதாக தெரிகிறது….. 
அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன்.. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கிறேன்….  மனைவியோடு சண்டை போடுவதில்லை என்று கூறுவார்கள். 

ஆனால் பேசுறவன் பூரா கிறிஸ்துவ மதமாற்ற பேர்வழிகள் போல கூட்டத்தில் சில செட்டப் செல்லாப்பாக்கள் தான் அதை படம்பிடித்து வீடியோ விற்பனை அனல் பறக்கும்...

கடசியா அடுத்த  பிட்டு போடுவானுகள்..
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள், இதற்கான அடுத்த கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.  அதற்காக பதிவு செய்பவர்கள் பெயரை கொடுக்கலாம் என்று கூறுவார்கள்.  

ஈஷா மையம், பல்வேறு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறது என்று கூறுவார்கள். 

இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவமனைகள் போன்றவற்றை சத்குரு செய்து வருகிறார் என்பார்கள். இதற்கான நன்கொடைகளை நீங்கள் வழங்கினால், மேலும் பல்வேறு ஏழைகள் பயன்பெறுவார்கள், அவர்களுக்கு சத்குருவால் மேலும் பல சேவைகளைச் செய்ய முடியும் என்று கூறுவார்கள்….  

யோகா வகுப்புக்கு வந்த அடிமைகளுக்குத்தான் உலகமே புதிதாகத் தெரிகிறதே… 

முதலில் தங்களை வாலண்டியராகப் பதிவு செய்து விட்டு, ஒரு பராரிக் குழந்தையை சத்குரு கட்டிப்பிடிக்கும் வீடியோவை பார்த்து விட்டு அந்தக் குழந்தைக்கு சத்குரு மூலமாக உதவலாம் என்று உடனே செக் எழுதித் தருவார்கள்.  

வகுப்பின் இறுதியில், நீங்கள் வாலண்டியராக சேர வேண்டும், இந்த யோகப்பயிற்சியின் பலன்களை உலகெங்கும் எடுத்துச் செல்ல சத்குருவுக்கு உதவுங்கள், என்று மூளைக்குள் அடிமைத்தனத்தையும், போதையையும் விதைப்பார்கள். இந்த போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வு அதோகதிதான்..


தன்னை  மறக்கும்  ஊக்கமருந்துகள்  அவர்களுக்கு தயாராக  இருக்கும், வாலண்டியராக சேர்ந்த  நபர்கள்  பெத்த  அப்பன்  ஆத்தாளை  கூட  ஓடி போயடுங்கன்னு  சொல்லிட்டு  சத்குரு  அடுத்து  விமானம்  வாங்க  தேனீக்கள்  போல  பயனற்ற  உழைப்பை  உழைப்பார்கள், அவர்களை  பெத்து  வளர்த்த  பெற்றோர்களுக்கோ  இல்லை  அவர்களுக்கோ  அவர்கள்  வாழ்க்கை  இருக்காது, 

அடிமைக்கு  கூட  தான்  அடிமை  என்று தெரிந்து  உழைப்பான்  ஆனால்  அது கூட  உண்ரமுடியாதா மேல் நிலைக்கு  அவர்கள்  சென்று இருப்பார்கள், வசியம்  என்ற  கலை  இந்தியாவில்  முன்பு  இருந்தது  நாபகம்  வருகிறது ஜட்டி குருவின்  கார்பரேட்  பிராடு தனத்தை  பார்த்து ...

ஏழைக் குழந்தைகளுக்காக உங்களின் ஒரு நாள் உணவை தியாகம் செய்யுங்கள் என்று கூறுகிறார் சத்குரு. நீங்கள் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்வதால் வரும் தொகையை அப்படியே ஈஷா மையத்துக்கு நன்கொடையாக வழங்கினீர்கள் என்றால், அதனால் மேலும் பல ஏழைகளுக்கு சத்குரு உதவுவார் என்று அதே வகுப்பின் இறுதியில் உங்களுக்கு ஓதப்படும்.

உங்களை ஒரு நாள் உணவைத் தியாகம் செய்து நன்கொடை தாருங்கள் என்று வற்புறுத்தும் சத்குரு வைத்திருக்கும் ஹம்மர் வாகனத்தின் விலை என்ன தெரியுமா ?  ஒரு கோடியை தாண்டும்,.  

சத்குரு சொந்தமாக வைத்திருக்கும் R22 வகை ஹெலிகாப்டரின் விலை என்ன தெரியுமா ?  14 கோடி. இதுக்கு மெயிண்டனன்ஸ் வருசத்துக்கு 15 லட்சம் ...

தென்னிந்தியாவில் ஈஷா யோகா பல மடங்கு வளர்ந்து விட்டது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 20 மடங்கு வளர்ந்துள்ளது.  

Whatsapலிருந்து நகலெடுக்கப்பட்டது.

Tuesday, 1 May 2018

தொழிலாளர்களின் தோழன் அண்ணல் அம்பேத்கர்.

இப்போது இந்தியா என்று அழைக்கப்படும் நாட்டின்

மே தினத்தின் உண்மை சமத்துவ நாயகன் 

தொழிலாளர்களின் தோழன் அண்ணல் அம்பேத்கர்!



இந்திய தேசத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல போராட்டங்களை அமைப்புகளும் தனி மனிதர்கள் பலரும் ஆங்காங்கே பிரச்சனைகளின் அடிப்படையில் முன்னெடுத்தனர் என்கிறது நம் வரலாறு.
ஆனால் ஒரு தலைவர் மட்டும் தொழிலாளர் நலன் சார்ந்த 28 சட்ட மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றினார்.

அவரிடம் எந்த தொழிலாளர்களும் தங்களது துயரங்களை போக்க மனு கொடுக்கவில்லை. தங்களுக்காக போராட அழைக்கவில்லை. ஆனாலும் மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலும், மனிதர்களை பாரபட்சமின்றி சமமாக நடத்தும் பண்பை கொண்டிருந்ததாலும் தன்னிச்சையாக அந்த 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமுல்படுத்தினார். அவர் தான் நமது நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt) அவர்கள்.
அவை:-

1. சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்
2. தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை திட்டத்தை அமுல்படுத்தினார்
3. முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை, ஆகஸ்டு 7, 1942ல் புது டில்லியில் நடத்தினார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமுல்படுத்தினார்.
4. சுரங்க பெண் தொழிலாளர்கள் மகப்பேறு அனுகூலச் சட்டம்
5. பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி
6. பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்
7. பெண் தொழிலாளர் மகப்பேறு அனுகூலம்
8. நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலைத் திட்டத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தடை மீட்பு
9. தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்
10. தேசிய வேலைவாய்ப்பு மையங்கள்
11. ஊழியர் அரசாங்க காப்பீட்டு திட்டம்
12. குறைந்தபட்ச ஊதிய திட்டம்
13. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்
14. தொழிலாளர் சேமநல நிதி
15. தொழில்நுட்ப பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர்கள் திட்டம்
16. மகப்பேறு நலச் சட்டம்
17. கிராக்கிப்படி
18. தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்
19. தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு
20. சட்டப்பூர்வ வேலைநிறுத்தம்
21. வருங்கால வைப்புநிதி சட்டம்
22. ஊழியர் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்
23. இந்திய தொழிற்சாலை சட்டம்
24. இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,
25. இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,
26. மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா
27. தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம்
28. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா

மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்..
அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம்!

நன்றி: Baskaran Chandiran

தந்தை பெரியாரின் மே நாள் உரை.

பொதுஉடைமைவாதி பெரியார். 


தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேசவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் எல்லா தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும், ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படு கின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.
அதுபோலவேதான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.
ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிட வில்லை.
ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும், முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.
இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப் படுவதாகும்.
எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.
ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும், வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும் பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கிய மானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதி யான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களேதான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா? என்று பாருங்கள்.
மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.
இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.
இன்று முதலாளி, தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும், பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.
ஆகவே, ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம்பாதித்துக் கொண்ட தினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.
இந்து மக்களின் மதமும், அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி, முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன். இந்த முதலாளி, தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர், கறுப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கறுப்பர்களாகும்.
ஆகையால், இதில் வெள்ளையர், கறுப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி வகுக் கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது. இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும், தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவையாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.
நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி, தொழிலாளி கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவையோ அல்ல.
பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவை தான் சிறிது ஓய்வும், சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக் கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கை விடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.
                                                                                        
 (காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில்  தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)
                                                                                                                                      குடிஅரசு-சொற்பொழிவு - 12.05.1935

பெரியார் பேசுகிறார் வலைத்தளத்திலிருந்து.

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...