Monday, 4 May 2015

எழுச்சியுடன் நடந்த
பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்த நாள் விழா..!
'***********************************************************'
கடந்த 19-4-2015  ஞாயிறு  மாலை கோவை வேலாண்டிபாளையம் தக்சின் உணவக வி.கே.ஆர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடந்தது.

விழாவை கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி
படிப்பகமும், வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கமும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன .

குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் அர .இராசன் வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ப.பா.ரமணி தலைமையேற்றார்.
புலவர் செந்தலை  ந.கவுதமன் ஆற்றிய  'பெரியாருக்கு முன்னர் நாடும் நாமும்'  என்ற ஆய்வுரை ஒலிவட்டை குத்தூசி குருசாமி  படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் அறிமுகம் செய்து வைக்க,





தந்தை பெரியார் திராவிடர் கழகப்  பொதுச் செயலாளர்  கு.இராமகிருட்டிணன்
வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட துணை ஆட்சியர் வி.சுப்ரமணியன் மற்றும் குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் வழக்குரைஞர் சி.பி.சண்முகசுந்தரம்  ஆகியோர் ஒலிவட்டைப் பெற்றுக் கொண்டனர் .

சூலூர் பாவேந்தர் பேரவையின் தலைவர் புலவர் செந்தலை ந.கவுதமன் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சிறப்புரையாற்றினார்.

எல்.ஜான் விழாவை ஒருங்கிணைத்தத்தோடு நன்றியுரையும் ஆற்றினார்.

அறிஞர்களும், ஏராளமான தோழர்களும், பொதுமக்களும்
விழாவில் ஆர்வத்தோடு பங்கேற்றார்கள்.

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...